62 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் கோளாறு – 8 விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி உடனடியாக கண்டறிந்தார். இந்த நிலையில் விமானி துரீதமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக சென்னையில் தரையிறக்கிறார். இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பத்திரமாக மாற்று விமானத்தில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று புறப்பட வேண்டிய உள்ளூர் மற்றும் சர்வேதேச 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதேவேளையில் பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Exit mobile version