இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இந்த பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இது இந்த வருடத்தில் பிரதமர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணமாகும். அமெரிக்காவில் நாளை முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியும் சந்தித்து பேச உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் 24-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுள்ள ஜோ பைடன் சந்தித்து, அவருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார்.
பின், அமெரிக்கா, இந்தியா ,ஜப்பான் ,ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.அதனை தொடர்ந்து, நியூயார்க் செல்லும் மோடி, 25ஆம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் என அவரது பயணம் குறித்த திட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.