நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்தை ஆகிய இருவரையும் ஒன்றாக காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.
கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் தான் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொகைன் போதைப்பொருள் கிடைத்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஸ்ரீகாந்த், பிரசாத் ஆகிய 2 பேரையும் ஒன்றாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரசாத் மூலமாக 8 முறை ஸ்ரீகாந்திற்கு கொகைன் சப்ளையாகி உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனைகளும் நடந்துள்ளது. அதனால் 2 பேரையும் ஒன்றாக வைத்து விசாரித்தால் தான் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் ஒன்றாக போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்தையும், பிரசாத்தையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை எழும்பூர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.