தங்கும் விடுதி என்ற பெயரில் விபச்சாரம்: இளம்பெண்கள் மீட்பு…

தங்கும் விடுதி என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த விடுதிக்கு சீல் வைக்கபட்டது.

அரியலூர், திருச்சி சாலையில் வாசவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இதனை கீழப்பழூவூரை சேர்ந்த வெற்றிகண்ணன் என்பவர் 6 மாதத்திற்கு ஒப்பந்தம் செய்து லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த லாட்ஜை விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 4 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண்களை தமிழ்நாடு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் விடுதியில் ஏஜெண்டாக செயல்பட்ட வெற்றிகண்ணன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சேகர் என்ற 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து அந்த லாட்ஜ்க்கு சீல் வைக்க மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அரியலூர் கோட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு வாசவி லாட்ஜிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version