ராகினி மற்றும் சஞ்சனா சிறையில் மோதிக் கொள்வதாகத் தகவல்.
போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் கைதாகி பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் சிறையில் மோதிக் கொள்வதாகத் தகவல்கள் வெளியாகிறது.
போதைப் பொருள் வழக்கு விவகாரத்தில் கைதாகி பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் அங்குள்ள சக கைதிகளிடம் சகஜமாகப் பேசி வந்துள்ளனர். ஆனல் நடிகை ராகினி, இரவில் புத்தகம் படிப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் விளக்கு எரிவதாக் தன்னால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா புகார் கூறியுள்ளார்.
அதேபோல் அதிகாலையில் எழுந்து யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்ய சஞ்சனா விளக்கைபோடுவதால் தன்னால் உறங்க முடியவில்லை என்று ராகினியும் சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளார்.
இதனால் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராகினி, சஞ்சனா இருவரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகிறது.