ஏன் இப்படி அலறுகிறாய் “மெரிடமுன்”!!!

Screaming Mummy என்றழைக்கப்படும் அலறும் மம்மி ஒரு பண்டைய எகிப்திய பெண்ணின் அசாதாரண மம்மியாகும். ஏன் இந்த மம்மி இவ்வாறு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் காலம் காலமாக யோசித்து வந்துள்ளனர். அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. “மெரிடமுன்” என இவரின் பெட்டிக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.  அவர் உயிருடன் இருந்தபோது, ​ உயரம் 5 அடிக்கு (151 சென்டிமீட்டர்) கீழ் இருந்திருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அலறியபடி வாயைத் திறந்து முணுமுணுத்த இந்த எகிப்திய பெண் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என. புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. சி.டி ஸ்கேன் மூலம் பரவலான  தோல் அழௌஐர்ஜி, இரத்த நாளங்களுக்குள் கொழுப்பு அகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

1881 ஆம் ஆண்டில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் “மெரிடமுன்” மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. லக்சர் நகரத்திலிருந்து நைல் நதியின் எதிர் பக்கத்தில் உள்ள ஒரு கல்லறை வளாகமான டீர் எல்-பஹாரி என்ற இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.  “மெரிடமுன்” என்ற பெயர் அவரை மூடி வைத்த மறைப்புகளில் பொறிக்கப்பட்டுள்ளது, ஆனால் எகிப்திய ஆராய்ச்சியாளர்களால் அவர் யார் என்று உறுதியாக கூற இயலவில்லை.  பண்டைய எகிப்தில் மெரிட்டமுன் என்ற பெயரில் பல இளவரசிகள் இருந்தனர், இதில் 17 வது வம்சத்தின் ஆட்சியாளரான தீபஸின் மகள், கிமு 1558 இல் ஆட்சி செய்த சீகெனென்ரே தாவோ II , மற்றும் சக்திவாய்ந்த ராமேஸ் II மகள்  என பலரது பெயரும் “மெரிடமுன்” தான்.

ஸ்கேன் மூலம் மெரிடமுன் நன்றாக மம்மி செய்யப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது, அவளுடைய பல உறுப்புகள் அகற்றப்பட்டிருந்தன, இருப்பினும் அவருடைய இதயம், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் இருந்தன.  அவரது வயிற்றுக் குழி, கைத்தறி மற்றும் பிசினால் நிரம்பியிருந்தது.  அவரது மூளை அகற்றப்படவில்லை. அவர் 50 வயதில் இறந்துவிட்டதாக நம்புகிறார்கள். அவரது இரத்த நாளங்களில் இருந்த கொழுப்பை வைத்தே அவர் மாரடைப்பால் இருந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
  

Exit mobile version