இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது- ரிவர்வ் வங்கி கவர்னர்

இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது என ரிசர்வ வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலகமே பெரும் பொருளாதார பாதிப்பையும் மந்த நிலையையும் சந்தித்துள்ளது.

உலகில் பெரும் வல்லரவு நாடுகளே இந்தக் கொரோனாவின் பிடியில் சிக்கிப் பாதிப்படைந்து வரும் நிலையில் வளரும் நாடான இந்தியா பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாசலில் உள்ளது என ரிசர்வ்  வங்கிகவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவில் உள்ள 30 லட்சம் அரவு ஊழியர்களுக்கு அரசு தீபாவளி போனஸ் அறிவித்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ரிசர்வ வங்கி கவர்னர்  மத்திய அரசும் மற்றும் ரிசர்வ வங்கியின் நாணய மற்றும் நிதிக் கொள்கைகள் ஆகியவற்றால் இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது என்று கூறியுள்ளார்.

அதேசமயம் நிதி நிறுவனங்களுக்கு போதுமான அளவில் மூலதனம் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version