சர்வதேச பெண்கள் தினம் : ஒருநாள் இங்கிலாந்து தூதரான மாணவி

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இளம்பெண்ணுக்கு கௌரவம்.

உலகில் பெண்கள் கல்வி,  விஞ்ஞானம் , ரசியல், தொழிழ்நுட்படம், கற்பித்தல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

இந்த நூற்றாண்டில் பெண்களின் அசாத்தியமான பங்கை எல்லோரும் அறிவர்.

இந்நிலையில் சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஒருநாள் இங்கிலாந்து தூதர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரக சமீபத்தில் நடத்திய போட்டியில் டெல்லியைச் சேர்ந்த மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் என்பவர்  வெற்றி பெற்றார்.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை அன்று இங்கிலாந்து தூதராகப் பதவி ஏற்ற அவர் தூதரக துறைத் தலைவர்களுக்குப் பணிகளை ஒதுக்கினார்.

மாணவி சைதன்யாவுக்கு பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version