தனி ஒருவனாக மாறிய சாம்சன்…! கேப்டனாக ருத்ரதாண்டவம்…. மெய்சிலிர்க்க வைத்த சாதனை ….!!

நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் தனி மனிதனாக போராடினார் .

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .

ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதனால் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் , ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது .

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான , சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் நிறுவனம் கேப்டனாக நியமித்ததது.

நேற்றைய போட்டியில் 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தான் அணி களமிறங்கியது.

ஒருபுறம் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழக்க ,மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி மனிதனாக , நின்று போராடி அணியின் வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் சென்றார்.

ஆனால் இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது . இவர் 63 பந்துகளில் 12 பவுண்டரி,7 சிக்சர்களை அடித்து விளாசினார். இறுதியில் சஞ்சு சாம்சன் 119 ரன்களை எடுத்து வெளியேறினார்.

எனவே கேப்டனாக பொறுப்பேற்று கொண்ட , முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரராக சஞ்சு சாம்சன் வரலாற்று சாதனை படைத்தார்.

அதோடு ராஜஸ்தான் அணிக்காக 2000 ரன்களை குவித்த 3வது வீரர் ன்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு வாட்சன் மற்றும் ரஹானே இருவரும் 2000 ரன்களை குவித்துள்ளது.

Exit mobile version