சிம்புவின் அடுத்த படம்: தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் நியூஸ், ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிம்பு இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘வந்த ராஜவதான் வருவேன்’ திரைப்படத்தில் காணப்பட்டார். படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்தாலும், ரசிகர்கள் இந்த படத்தில் அவரது நடிப்பைப பாராட்டினர். அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
simbu

கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், இந்த படம் சுரேஷ் காமாட்சி என்பவரால் தயாரிக்கப்படுகிறது.

இது எஸ்.டி.ஆரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இப்போது, படத்தின் தயாரிப்பாளர் சூப்பரான அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

நவம்பர் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடரும் என்று தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த .வண்ணம் இருக்கின்றனர்.

Exit mobile version