பாகிஸ்தானை உலகமே பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

உலகம் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைமையில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐ.நா.சபையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை மந்திரி ஹினா ரபானி ஹர் கூறியது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பாக். மந்திரி ஹினா ரபானி பேசியதை நான் பார்த்தேன். அவர் கூறித்த செய்திகளை நான் வாசித்தேன்.

நான் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூறுகிறேன். ஹிலாரி கிளிண்டன் (அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். ஹினா அப்போது மந்திரியாக இருந்தார். ஹினா அருகில் இருந்தபோது ஹிலாரி கூறியது என்னவென்றால், உங்கள் வீட்டிற்கு பின்னால் பாம்புகளை வைத்திருந்தால், அது உங்கள் அண்டை வீட்டுக்காரரை மட்டும் கடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது.

மாறாக தங்களை வைத்திருக்கும் மக்களையும் பாம்பு கடிக்கும் ஆனால், உங்களுக்கு தெரியும்… சிறந்த அறிவுரைகளை பாகிஸ்தான் விரும்பாது என்று கூறினார்’ என்றார். உலகம் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தானை பார்க்கிறது. பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்று உலகம் மறந்துவிடவில்லை’ என்றார்.

Exit mobile version