முதல் வெற்றி யாருக்கு? கொல்கத்தா,ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக் தலைமையிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வார்னர் தலைமையிலும் இன்று இரவு அபுதாபியில் மோதுகின்றனர்.

அபுதாபி:

13வது ஐ.பி.எல்.தொடர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியின் 8வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபில் நடைபெறுகிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றனர்.

இரு அணிகளும் முந்தைய நடந்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதனால் எந்த அணி முதல் வெற்றியை பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் தோல்வி அடைந்து இருந்தது.

இரு அணிகளும் இதுவரை 17 போட்டிகளில் மோதி அதில் கொல்கத்தா அணி 10 போட்டிகளிலும், ஐதராபாத் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version