பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி. பணியிடை நீக்கம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி.யின் பணியிடை நீக்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடக்க காலங்களில் காவல்துறையினரும், மத்திய அரசின் பாதுகாப்பு படையினரும் அப்பகுதிகளில் யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவருக்கு ஐ,ஆர்.பி.என். பாதுகாப்பு படையின் துணை கமாண்டன்டன்( காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரானது) ஆர்.சுபாஷ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

பணிநீக்கம்
இதையடுத்து, பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது பணியிடை நீக்கக்காலம் வரும் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது.

மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
இதையடுத்து காவல்துறை தலைமையகம் எஸ்.பி. சுபாஷின் பணியிடை நீக்கக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அக்கோப்பினை புதுச்சேரி அரசுக்கு அனுப்பியது. முதல்வர் ஒப்புதலுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அக்கோப்பு அனுப்பப்பட்டது. காவல்துறை தலைமையகம் அனுப்பிய கோப்புக்கு கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, எஸ்.பி. சுபாஷின் பணியிடை நீக்கம் நீட்டிப்புக்கான மூன்று மாத காலம், வருகிற அக்டோபர் 17 முதல் தொடங்குகிறது.

Exit mobile version