ரியா சக்கரவர்த்தியை துன்புறுத்தாமல் விடுவிக்க ஆதிர் சவுத்ரி கோரிக்கை.
ரியா சக்கரவர்த்தியை துன்புறுத்தாமல் விடுவிக்க ஆதிர் சவுத்ரி கோரிக்கை.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரண வழக்கு தற்போது, போதைப்பொருள் வழக்காகப் பதிவு செய்த போதைத் தடுப்புப் பிரிவினர் சுஷாந்த்தின் காதலியைக் கைது செய்தனர்.
இதையடுத்து, தீபிகா படுகோனே உள்ளிட்ட சில நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் சில முன்னணி நடிகைகள் சிக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கில் அவரது உடலை சமீபத்தில் பிரேத பரிசோதனை செய்த ஆய்வாளர்கள் சுஷாந்த் மரணம் தற்கொலைதான் என்றும் கொலையல்ல என்று மருத்துவ அறிக்கையில் கூறினர்.
இதையடித்து மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, மருத்துவர் அறிக்கையில் சுஷாந்த் மரணம் தொடர்பான மர்மம் விலகியுள்ளநிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தியைத் துன்பம் செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.