விழா மேடையிலேயே அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ம.பி. முதல்வர்

விழா மேடையிலேயே அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ம.பி. முதல்வர்.

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்துவதில் மந்தமாக பணியாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை விழா மேடையிலேயே பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

நிவாரி என்ற இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளில் ஒருவர் குறித்து சரமாரியாகக் குற்றம்சாட்டினர். இதையடுத்து, அந்த அதிகாரியை இப்போதே பணியிடை நீக்கம் செய்வதாக முதலமைச்சர் அறிவித்தார். அதிகாரி குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version