2 வயது மகளை பீர் குடிக்க கட்டாயம் செய்த கணவன் மீது புகாரளித்த மனைவி அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் பெருநகருக்கு அருகில் உள்ள கோட்டா என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது என்.ஆர்.ஐ கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் துபாயில் வசிக்கும் தன் கணவர் தங்கள் 2 வயது மகளின் வாயில் பீர் பாட்டிலை வைத்து குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 1 வருடத்திற்கும் மேலாக தன்னுடன் உடலுறவில் ஈடுபடவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
2016-இல் திருமணம் செய்து கொண்டதாகவும், 2017 ஆம் ஆண்டில் தனது கணவருடன் துபாய்க்குச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பெண், துபாயில் ஒன்றாக வசித்த போது தினமும் குடி போதையில் வீடு திரும்பும் கணவர், தன்னையும் பீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக வேண்டாம் என்று கூறி விலகி சென்றாலும் சில நேரங்களில் என்னை விடாமல் துரத்தி வந்து வலுக்கட்டாயமாக பீர் பாட்டிலை என வாயில் திணித்து விடுவார். அது மட்டுமல்லாமல் தங்கள் கைகுழந்தையான மகளுக்கு வெற்று பீர் கேன்களை விளையாட கொடுப்பார், சில நேரங்களில் எல்லை மீறி சென்று காலி பீர் கேன்களை குழந்தையின் வாயில் வைத்து குடி, குடி என்று கைக்குழந்தை என்றும் பாராமல் டார்ச்சர் செய்வார். தனது மாமியாரின் தூண்டலின் பேரில் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார் என்றும் புகார் மனுவில் அப்பெண் கூறி உள்ளார்
துபாயில் இவ்வளவு கொடுமைகளை செய்து விட்டு இந்தியா திரும்பிய பின் தன்னை தன் தாய் வீட்டில் விட்டு சென்று விட்டார். சமீபத்தில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் துபாய் பறந்து விட்டார். மனம் திருந்தி என்னை வந்து அழைத்து செல்வார் என்று காத்திருந்த நிலையில், தன்னை மனம் நோக செய்து விட்டு மீண்டும் துபாய் பறந்துள்ள கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் கோரியுள்ளார். பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் தற்போது அவரின் கணவர் மீது போலீஸ் அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.