மூதாட்டிகள் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வடசென்னை பகுதியில் மூதாட்டிகள் கவனத்தை திசை திருப்பி நகையை கொல்லியடித்த மூன்று பெண்கள் கைது.

வடசென்னை பகுதியில் சமீப காலமாக தனியாக ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் வரும் முக்குதடி மற்றும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் சில பெண்கள் அவர்களின் செயின் ஹூக் லூசாக உள்ளதாகவும், கழண்டு விழுந்திடும் என கூறி அதை கழட்டி பைக்குள் போடுமாறு கூறி அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, நூதன முறையில் நகையை பெண்கள் சிலர் அபேஸ் செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் சமீபத்தில் 3 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டி வந்தனர். கடந்த 20ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முனியம்மாள் எனும் மூதாட்டி இவர் திருவெற்றியூரில் இருந்த தன் வீட்டிற்கு பேருந்தில் சென்றபோது அவரிடம் இந்த 3 பெண்கள் நூதன முறையில் 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

புகாரின்பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறித்த 3 பெண்களை நேற்று பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் அருகே மடக்கி பிடித்தனர் விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமி, உஷா, இசக்கியம்மாள் என்பது தெரியவந்தது. இவர்களை தற்போது கைது செய்து காவல் துறையில் அடித்துள்ளார்.

Exit mobile version