செல்போனால் மூன்று பேர் பலி

கரூர் மாவட்டம் ராயனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் மொபைல் போன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி இரவு வீட்டில் சார்ஜ் போட்டு, அருகில் இருந்த சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த போது மொபைல்போன் வெடித்ததாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி முத்துலட்சுமி கருகிய நிலையில் இறந்துள்ளார். பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த முத்துலட்சுமியின் மகன்கள் ரஞ்சித் (வயது 3), தட்சித் (வயது 2) ஆகிய இரண்டு பேரும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version