மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

பள்ளி மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வில் விலக்கு பெற தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தங்களின் பிறந்தநாளில் மரக்கன்று நடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச தனியே பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version