டுவிட்டரின் லோகோவை மீண்டும் மாற்றிய எலான்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை கடந்த 4-ம் தேதி எலான் மஸ்க் திடீரென மாற்றினார். “நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டது. Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை டுவிட்டரின் லோகாவாக எலான் மஸ்ட் மாற்றினார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதனால் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் மதிப்பு அதிகரித்தது. இந்நிலையில் எலான் மீண்டும் டுவிட்டரின் லோகோவாக நாய்க்கு பதில் நீல நிற குருவியை மாற்றியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Exit mobile version