முதல் மனைவிக்கு பிறந்த தனது 3 வயதேயான மகளை 2-வது மனைவியை மகிழ்ச்சிப்படுத்த தந்தையே தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் நாகராஜ்.
இவர் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் மனைவிக்கு இவருக்கும் பிறந்த 3 வயதேயாகும் மகளை பெற்ற தந்தையே துன்புறுத்தி வருவதாக அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது இரண்டாவது மனைவி சிறுமிக்கு உணவு அளித்துக் கொண்டு இருக்கும் போது மகளை கடுமையாக பெற்ற தந்தையை தாக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை தந்தை அடிப்பதை கவனிக்கும் இரண்டாவது மனைவி, அடிப்பதை தடுக்கவோ கண்டிக்கவோ செய்யாமல் சிரித்து ரசித்து வருகிறார். இதனை பொதுமக்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.