பிரபல நிறுவனங்களின் வெப்சைட்டுகளை வாங்குவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்ற நிலையில், அர்ஜென்டினாவில் கூகுள் வலைதளங்தை வெறும் 215 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் 30 வயது வெப் டிசைனர் ஒருவர். அதுவும் முறையாக அவர் வாங்கியது தான் ஆச்சரியம்!
அர்ஜென்டினா நாட்டுக்கான கூகுள் வெப்சைட் இரண்ஐ மணி நேரத்திற்கு ஏலத்திற்கு வந்தபோது, நிகோலஸ் குரோனா (வயது 30) என்பவர் சட்டப்பூர்வமாக, மிக சாதாரண முறையில், குறைந்து விலைக்கு வாங்கி விட்டார். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏரிஸை ஒட்டிய பகுதியில் வசிக்கும் நிகோலஸ், கடந்த புதன்கிழமை, தனது வாடிக்கையாளர் ஒருவருக்காக வெப்சைட்டை டிசைன் செய்து கொண்டிருக்கிறார். அப்போது கூகுள் வெப்சைட் செயல்படவில்லை என அவருக்கு வாட்ஸ் அப் தகவல் வருகிறது.
இதனையடுத்து அவர், கூகுள் வெப்சைட்டை (www.google.com.ar) இன்டர்நெட்டில் தேடியிருக்கிறார். அப்போது அது வேலை செய்யவில்லை என தெரிந்து கொண்டு, அர்ஜென்டினா கூகுளை நிர்வகிக்கும் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டர் (என்ஐசி) சென்று கூகுளை தேடியிருக்கிறார். அப்போது, அர்ஜென்டினாவுக்கான கூகுள் வெப்சட்டை வாங்குகிக் கொள்ளலாம் என கேட்டிருக்கிறது. ஏதோ தவறு நடப்பது புரிந்து, அது கூறிய வழிமுறைகளை பின்பற்றி, 270 பெசோ (ரூ.215) கொடுத்து வாங்கிவிட்டார். அதற்கான பில்லும், அவரது மெயிலுக்கு வந்து விட்டது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கூகுள் அர்ஜென்டினா நிறுவனம், தங்கள் வெப்சைட்டை சில மணி நேரத்திற்கு ஒருவர் வாங்கி விட்டார் எனவும், பின்னர் தாங்களே அதனை பெற்று கொண்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், ‘இது எப்படி சாத்தியமானது என்பது எனக்கு இப்போது வரை ஆச்சரியமாக இருக்கிறது. நான் வாங்கிய பின் www.google.com.arல் தேடிப் பார்த்தபோது, என் விவரங்கள் வந்தன. சில மணி நேரத்தில் என்னிடம் இருந்த கட்டுப்பாடு பறிக்கப்பட்டு விட்டது. எனது பணத்தையும் திருப்பி தரவில்லை. கூகுள் அதிகாரிகளும் என்னை தொடர்பு கொள்ளவில்லை’ என கூறினார்.