மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேச வேண்டிய கருத்துக்களை 24ம் தேதிக்குள் பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி, பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக பேசும் “மனதின் குரல்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 80 மாதங்கள் கடந்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வானொலி வாயிலாக மக்களிடம் உரையாற்றுவார், அப்போது சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள், உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என பலதரப்பிடம் நேரடியாக தொலைபேசியில் கலந்துரையாடுவார். அதன் வரிசையில், 81வது மனதின் குரல் நிகழ்ச்சி இம்மாதத்திம் இறுதி ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசவேண்டிய கருத்துக்களை நாட்டு மக்கள் நமோ ஆப் மற்றும் மை கவர்மண்ட் என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணை அழைத்தும் கருத்துக்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களுடைய கருத்துக்களை 24ம் தேதி இரவு 11.45 மணி வரை மேற்கண்ட இணையம் மற்றும் தொலைபேசி எண்களை அழைத்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.