அமெரிக்கா: குளிர்கால புயலால் 32 பேர் பலி; ரயில், விமான சேவை பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது. பருவநிலை மாற்றம் எதிரொலியாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் அதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. கடந்து போன கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ, வெப்ப அலை பாதிப்புகளுக்கு மொத்தம் ஆயிரக்கணக்கானோர் வரை உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இது அதிகரித்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், குளிர்காலம் தொடங்கி நடந்து வரும் சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதன் தாக்கம் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் கடந்த வெள்ளி கிழமை 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின், அதனை சீர்செய்யும் பணி நடந்தது.

Exit mobile version