பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் பெங்களூருக்கு மூன்றாம் இடம்!!!

தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பா தாவது.

கடந்த 2018-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் நகரங்களின் அடிப்படையில் நாட்டின் தலைநகரான டெல்லி முதல் இடமும், மும்பை 2-வது இடமும், காசியாபாத் 3-வது இடமும், கான்பூர் 4-வது இடமும் பிடித்து இருந்தது. பெங்களூரு 5-வது இடத்தில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த ஆண்டும் (2019) மீண்டும் டெல்லி (431) வழக்குகளுடன் முதல் இடத்திலும், (377) வழக்குகளுடன் மும்பை 2-வது இடத்திலும், (158) வழக்குகளுடன் பெங்களூரு 3-வது இடத்திலும், (117) வழக்குகளுடன் கான்பூர் 4-வது இடத்திலும், (115) வழக்குகளுடன் நாக்பூர் 5-வது இடத்திலும், (114) வழக்குகளுடன் காசியாபாத் 6-வது இடத்திலும், (110) வழக்குகளுடன் புனே 7-வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் 8-வது இடத்திலும், 83 வழக்குகளுடன் கொச்சி 9-வது இடத்திலும், 82 வழக்குகளுடன் இந்தூர் 10-வது இடத்திலும் உள்ளது.அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Exit mobile version