ஈசியான, சத்தான கொள்ளு கத்திலி செய்றதுக்கு நான்கே பொருள்கள் போதும். கொள்ளு கத்திலி எப்படி செய்றதுனு பார்க்கலாமா…

காஜு கத்திலி கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்னடா கொள்ளு கத்திலி-னு தான யோசிக்குறீங்க. கொள்ளு-ல எப்படி கத்திலி செய்ய முடியும்னு யோசிக்குறவங்களுக்கு, அதுவும் வெறும் நான்கு பொருள்கள் மட்டுமே வைத்து, ஈசியான, சத்தான கொள்ளு கத்திலி எப்படி செய்றதுனு இங்கே பார்க்கலாம்.
மேலும், உடல் எடை அதிகமா இருக்குறவங்க, கொள்ளு-வை உணவில் சேர்த்து வரும் போது உடல் எடை கூட சீக்கிரமா குறையும்.
தேவையான பொருள்கள்
- கொள்ளு – 1 கப்
- கருப்பட்டி – ¼ கப்
- ஏலக்காய் பொடி
- சுக்கு – சிறிதளவு
செய்முறை
- கொள்ளு-வை நன்றாக வேக வைத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த கொள்ளுடன், கருப்பட்டி, ஏலக்காய் பொடி, சுக்கு சேர்த்து நன்றாக இடித்து, திரட்டி விருப்பப்பட்ட வடிவத்தில் தட்டி எடுத்தால், சுவையான கொள்ளு கத்திலி ரெடி…
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, படத்தில் குறிப்பிட்டுள்ளது போல, அவர்களுக்கு பிடிச்ச வடிவத்தில கொடுத்தீங்கனா, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. இதில் முந்திரி பருப்பு, உலர் திராட்ச்சை உள்ளிட்டவற்றையும் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதை வயதானவர்களுக்கும் கொடுக்கலாம், கடித்து சாப்பிட சிரமப்படுபவர்கள் கூட, இதை சுலபமாக சாப்பிட முடியும்.