இட்லி மீந்துவிட்டதா இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க

இட்லி போண்டா ரெடி பண்ணலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

உதிர்த்த இட்லி (4)

வெங்காயம் (பெரியது 1)

பச்சை மிளகாய் 1

கடலை மாவு (3 மேஜை கரண்டி)

கறிவேப்பிலை

செய்முறை: இட்லியை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, கடலைமாவு, நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து உருண்டையாக உருட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதி வந்ததும் இந்த உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் இட்லி போண்டா ரெடி. இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட ருசி பிரமாதமாக இருக்கும்.

இட்லி அதிகமாக மீந்துவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள். அதை இப்படி இட்லி போண்டா ஸ்நாக்ஸாக மாற்றி பரிமாறுங்கள். பாராட்டு  உங்களுக்குத்தான்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version