சுவையான, சத்தான, இனிப்பான அவல் கொழுக்கட்டை செய்றது எப்படினு பார்க்கலாம் வாங்க.
கொழுக்கட்டை-னு சொன்னாலே எல்லாருக்கும் பிடிக்கும். அதுலயும் இனிப்பு கொழுக்கட்டைனா சொல்லவா வேணும், குட்டீஸ் எல்லாரும் அவ்வளவு விருப்பப்பட்டு சாப்டுவாங்க. ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா அவல் வைத்து செய்யப் போறோம். சரி வாங்க இப்ப ஈஸியா, பாரம்பரிய சுவையோடு அவல் கொழுக்கட்டை எப்படி செய்றதுனு பார்க்கலாம்… செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணலாம் வாங்க…
தேவையான பொருள்கள்
- பொடித்த அவல் -1 கப்
- தேங்காய் பால் – 1 கப்
பூரணம் செய்ய
- எள்ளு
- தேங்காய் பூ
- ஏலக்காய் பொடி
- நாட்டுச் சக்கரை
செய்முறை
- எள்ளை நல்ல வெயில்ல காயவைச்சு எடுத்துக்கங்க. அப்பதான் பொடி பண்ண ஈசியா இருக்கும்.
- காயவைச்சு எடுத்த எள்ளை, நல்லா பொடி செஞ்சு வைச்சுக்கோங்க.
- பொடி செய்த எள்ளோடு, தேங்காய் பூ, ஏலக்காய் பொடி, நாட்டுச் சக்கரை எல்லாம் சேர்த்து, நல்லா கலந்து , பூரணம் செய்றதுக்கு உருண்டையா உருட்டி வச்சிக்கோங்க.
- உங்களுக்கு விருப்பமான வெள்ளை அவல் அல்லது சிகப்பு அவலை எடுத்து, நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்ததா 2 ஸ்பூன் அவல் பொடி எடுத்து, தேங்காய் பால் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து வச்சுகோங்க.
- இப்போ மாவு, பூரணம் வைத்து பிடிக்க தயார்.
- ஒவ்வொரு கொழுக்கட்டையை செய்யும் போதும், அவல் மற்றும் தேங்காய் பால் கலந்துகோங்க. மொத்தமாக்க கலந்து வைச்சா இறுகிடும். கொழுக்கட்டை செய்ய வராது.
- உருண்டையா வேணும்னா, உருட்டி, பூரணம் வைச்சு மூடிடுங்க. இல்லனா உங்க குழந்தைங்க விருப்பப்படுற ஷேப்-ல செஞ்சு கொடுத்து அசத்துங்க.
- உருட்டி வச்சத, இட்லி தட்டில வைச்சு மூடி போட்டு, 15 நிமிடங்கள் கழித்து திறந்தால், அவல் பூரண கொழுக்கட்டை பூ போல் வெந்திருக்கும்.
அவ்வளவு தான் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி…