பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… அமைச்சர் பேட்டி

பொதுப்பணித்துறை சார்பில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமான முறையில் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு பேட்டி.

சென்னை கிண்டி தொழிற் பயிற்சி பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில்  பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா.வேலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:சென்னை மையப்பகுதியில் 7.15 ஏக்கர் அரசு நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இங்குள்ள முற்செடிகளை அப்புறப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாக சமூக கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே  இம்மாதிரியான அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் படுகிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வருங்காலங்களில் மழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படகூடாது என்ற நோக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகஎக்மோர் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் 3 நீர் போக்கிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக நீர் தேங்கள் கண்டறிந்து அதனை சரிசெய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை சார்பில் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. பேட்டி: ஏ.வா வேலு,பொதுப்பணித்துறை அமைச்சர்.

Exit mobile version