பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது சைபர் கிரைம்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
.சமீபத்தில் யூடியூப் சேனலில் ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டர் விசிக தலைவர் திருமாவளன்.
அதில், மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளது எனச் சில பகுதிகளை மேற்கோளாகக் கூறி,விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ தமிழகத்தி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவுக்குப் பெரும் பெண்கள் அமைப்பு மற்றும் பாககவின் பெரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையே நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய .
நடிகை குஷ்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திப் பேசியதாக குற்றம்சாட்டினார்.
இந்ந்த நிலையில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது பாஜக கட்சியைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் அளித்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.