சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதை கருத்தில் கொண்டு ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் பன்னோக்கு மருத்துவமனையானது சுமார் 4.89 ஏக்கர் நிலப்பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரிலும் கட்டப்பட்டுள்ளன.இந்த நிலைமையில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றை தினம் (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை திறந்து வைக்கிறார் முதல்வர்
-
By mukesh

Related Content
" இது சுத்தமான அரசியல் சதி... " - கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் ... பின்னணியில் யார்?
By
Jansi
February 28, 2026
மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!
By
Jansi
January 28, 2026
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
By
daniel
November 26, 2025
ரி - ரீலிஸ்: அமர்க்களம்
By
daniel
November 20, 2025