பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் வாழும் போக்கு அதிகரித்து வருகிறது. வறுமை, உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஜூன் 20ந் தேி உலக ஏதிலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கிறார்.
அதில், பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்! மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்! நமது திராவிட மாடல் ஆட்சியில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்! போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
