மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மணிமுத்தாறு, சேர்வலாறு
தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.
தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, வரும் நவ. 1 முதல் 31.3.2021 வரை 151 நாட்களுக்கு 14 ஆயிரத்து 351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரைத் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.