பாமகவின் முக்கியத் தலைவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன்

பாமக தலைவர் அன்புமணி மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணிக்கு இன்று எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்யப்படுகிறது

பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் பிறகு மருத்துவரின் அறிவுறுத்தல் பேரில் அடுத்தகட்ட சிகிச்சைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என ஜி.கே.மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாமகவின் சேலம் எம்எல்ஏ அருள் நேற்று மதியம் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை இசிஜி பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்த பிறகு வீடு திரும்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என அருள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் மாவட்டவாரியான நிர்வாகிகள் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version