பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாமகவைச் சேரந்த அருள் இருந்து வருகிறார். இவர் தன்னுடைய அலுவல் காரணமாக இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார். அதிகாரிகளைச் சந்திக்க லிஃப்ட் ஏறிச் சென்றபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உதவியாளர் அருளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து இசிஜி எடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர அறிவுறுத்தப்பட்டதையடுத்து, அருகிலுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது மருத்துவர்கள் அருளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.