மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…!

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்கள், தொடரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, வருகிற 20ந்தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. நிர்வாகிகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களின் இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. `

Exit mobile version