மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள், எங்களை தோற்கடிக்க பார்க்கிறார்கள்.. புதுச்சேரி முதல்வர் பேச்சு

மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்துள்ளார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 6 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கூறியதாவது, மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்துள்ளார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் இப்போது அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளனர்.

Read more – இளைஞர்களின் கோரிக்கையை ஏற்பேன்… மக்களின் கைகளில் சேர்ப்பேன்… ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மக்களுக்காக தொடர்ந்து பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை. புதுச்சேரியை மோடி அரசு புறக்கணிக்கிறது என்று நாராயணசாமி பேசியுள்ளார்

Exit mobile version