தி.மு.க-வில் இணைந்தனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று ரஜினிகாந்த் சொன்னதால் அவரது மன்ற நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்து வருகின்றனர்.

சுமார் 25 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தார். இலவு காத்த கிளிபோல இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒரு அறப்போராட்டத்தை நடத்தினர். இதனால் கோபமடைந்த ரஜினி மீண்டும் ஒரு அறிக்கை மூலம் தன் நிலைப்பாட்டை தெரிவித்தார். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது உறுதியானது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இப்போது மாற்றுக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ, ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செலவானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர் கணேசன் உள்பட 4 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். பின்னர் பேசிய ஜோசப் ஸ்டாலின்ட்சியில் சேருவதை நான் தலைமையிடம் கூறினேன். எந்த கட்சியில் சேர வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறினர் என்று தெரிவித்தார். விரைவில் மற்ற நிர்வாகிகளும் தி.மு.கவில் இணைய இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version