அனல் பறக்கும் அதிமுக சந்திப்புகள்.. கட்சி மற்றும் ஆட்சிக்கு இபிஎஸ், ஓபிஸ் மோதல்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் மாறி, மாறி ஒபிஸ் மற்றும் இபிஎஸ் உடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஓபிஸ் மற்றும் இபிஎஸ் உடன் அமைச்சர்கள் மாறி, மாறி ஆலோசனை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, அ.தி.மு.க.வேட்பாளர் யார் என்று அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். மேலும், சென்னையிலும் தனது ஆதரவு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். எடப்பாடி பழனிசாமியம் தனது ஆதரவு அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அடுத்தடுத்து ஆலோசனை
அவருடன் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் குழு மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, முதலமைச்சரை அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் வளர்மதி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். இதற்கிடையே, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், ஒரு தரப்பில் 6 பேரும், மற்றொரு தரப்பில் 5 பேரும் இடம்பெறுவார்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version