’’கமல்ஹாசன் அதை பிளாஷ்பேக்காக நினைத்துப் பார்க்கனும்-’’ கமல் டுவீட்டுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

சென்னையில் பெய்யும் மழை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை என விமர்சித்ததற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி.

நாட்டு நடப்புகளையும் அரசியல்நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் கமல், நேற்று சென்னையில் பெய்த மழை குறித்து தனது டிவிட்ட பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.

குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் …எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது :

சுனாமி பேரழிவு காலத்திலும், கஜா புயல் காலத்திலும் தமிழக அரசின் நடவடிக்கை சிறப்பாக இருந்தது…கமல்ஹாசன் பாணியில் இதைச் சொல்வதென்றால்  அவர் பிளாஸ்பேக்கா நினைத்துப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version