விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்!

கர்நாடகாவில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு சென்று முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இங்கு வர வேண்டாம் என்றும் பிறகொரு தேதியில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரவித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Exit mobile version