2லட்சம் ஆண்டுகள் பழமையான சொகுசு படுக்கை!!!


தென்னாப்பிரிக்க குகையில் புல் மற்றும் சாம்பலிலிருந்து தயாரிக்கப்பட்ட 2,00,000 ஆண்டுகள் பழமையான படுக்கையின் தடயங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூட்டைப்பூச்சிகளின் தொந்தரவு இல்லாமல் இருக்க புல் மற்றும் சாம்பல் கலவையில் படுக்கை செய்யப்பட்டுள்ளது. 2.3 லட்சம் ஆண்டுகளாக மனிதர்களின் கால் படாத குகையில் இந்த படுக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கற்கால மனிதர்களின் அறிவாற்றல், நடத்தை மற்றும் சமூக சூழல் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும்  என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன் வரை 70ஆயிரம் ஆண்டுகள் பழமையான படுக்கையே தொன்மையானது என ஆய்வாளர்கள் நினைத்து வந்த நிலையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. சாம்பல் மட்டுமல்லாது இன்னும் சில மூலிகை செடிகளை பயன்படுத்தி பூச்சிகள் வராமல் தடுத்துள்ளனர்.
கார்ட்டூன் கதாப்பாத்திரமான Flintstonesஉடன் இதை சாப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

Exit mobile version