பழம்பெரும் நகரம் அகழாய்வில் கண்டுபிடிப்பு!!!

பிரான்ஸை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் Vienne நகரில் இருக்கும் Rhone ஆற்றங்கரையில் கட்டப்படவுள்ள குடியிருப்பு வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய ரோம் நகர தொல்லியல் பொருட்களை கண்டறிந்துள்ளனர். சொகுசு வீடுகள் பளிங்கு தரை என பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றத்தின் பாதிப்புகளால் இந்த பகுதிகள் கைவிடப்பட்டதாகவும் அப்போது சாம்பலால் இந்த பகுதிகள் மூடப்பட்டிருந்ததாலேயே பல அறிய தொல்லியல் பொக்கிஷங்கள் இன்று வரை பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Vienne நகரம் ரோம் கால அரங்கங்கள் மற்றும் கோயில்களுக்காக பிரபலமானவை. பண்டைய ரோம எல்லைப் பகுதிகளை இனைக்கும் முக்கியப் பகுதியாகவும் இந்த இடம் இருந்திருக்கிறது. 75,000 சதுரடி பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் கி.பி.ஓண்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்களை கண்டுபிடித்திருப்பது பெரும் ஆசரியத்தை ஏற்படுத்துவதாகவும் இதைப்போன்ற தொல் பொருட்கள் இப்பகுதியில் கிடைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


கி.பி 79ம் வருடம் எரிமலை தக்குதல்களால் அழிந்த பண்டைய ரோம் நகரமான Pompeii 1749 ல் தற்செயலாக இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பே ரோம் நகரம் எவ்வளவு வளமையானதாகவும் உயர்வானதாகவும் இருந்தது என்பதை இந்த உலகுக்கு முதன்முறையாக எடுத்துரைத்தது. பண்டைய நாகரீகத்தை நமக்குக் காட்டும் ஜன்னலாகக் கருதப்படும் Pompeii எவ்வளவு முக்கியமானதோ அதே பொல தற்போதைய கண்டுபிடிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் கடந்த 50முதல் என்பது ஆண்டுகளில் பண்டைய ரோம் நகரம் குறித்து செய்யப்பட்ட சிறந்த அகழ்வாரய்ச்சிப் பணியாகவும் இது பார்க்கப்படுகிறது. எனவே அகழ்வாராய்ச்சித் துறையினர் இப்பகுதியை Little Pompeii என்றழைக்கின்றனர்.

Maenads எனப்படும் ரோமப் பெண் தெய்வம், Satyrs எனப்படும் பாதி ஆடு, பாதி மனிதன் போன்ற உயிரினங்களின் ஓவியம் திட்டப்பட்ட தரை சற்றும் சிதிலமடையாமல் இருக்கிறது. பிரகாசமான சூரிய ஒளிபாயும் அறைகள், குற்றவாளிக் கூண்டுகள், பரந்து விரிந்த தோட்டம், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அமைப்பில் வீடு என பல ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைத்துள்ளன.


மிகவும் கலைநையம் மிக்க நீரூற்றும் அதன் நடுவில் இருக்கும் ஹெர்குலெசின் சிலையும் பலரையும் கவர்ந்துள்ளது. அவர்கள் ஆராயும் வீடு செல்வ செழிப்பான ஒரு பெரு வணிகரின் வீடாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் பாதுகாப்பாக, தரைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்காக கொண்டு செல்லப் படவுள்ளன. ஆய்வுகளுக்கு பிறகு 2019ம் ஆண்டு ரோம நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக கண்காட்சியில் இந்த பொருட்கள் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய அகழ்வாய்வுப் பனிக்கு செப்டம்பர் மாதம் வரையே அனுமதி அளிக்கப்படிருந்த நிலையில் தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள் காரணமாக பிரென்ச் அரசு இந்த ஆண்டு இறுதி வரை அனுமதியை நீட்டித்துள்ளது.

அடுத்தகட்டமாக இந்த அணி இன்னும் பழமையானதாகவும், தொழில் பட்டறைகள் அடங்கிய பகுதியாகக் கருதப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் ரோம நாகரிகத்தின் மேலும் பல வெளிவராத் தகவல்கள் பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகழாய்வு முடிந்ததும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடம் மீண்டும் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்காகவே விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version