நவீன தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கோவில்:


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான கோயில் தொழில்நுட்ப உதவியுடன் வடக்கு அயர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோவில் கி.மு.1000ம் ஆண்டில் இருந்தே பல மத சம்பிரதாயங்கள் நடத்தப்படட இடம் என நம்பப்படுகிறது. கற்காலத்திற்கு பிந்தைய இரும்பு காலத்தை சேர்ந்தது இந்த கட்டிடம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கிறிஸ்தவ காலத்திலும் அவை மத சடங்குகளை நடத்தும் இடமாகவும் அதிகார மையமாகவும் இருந்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் LIDAR – Light Detection And Ranging மற்றும் Remote Sensing எனப்படும் தொலைவில் இருந்து உணர்தல் ஆகிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து கண்டறிந்துள்ளனர். ஒரு விமானத்தில் இருந்து பல லட்சக் கணக்கான ஒளிக் கற்றைகளை நோக்கி பாய வைக்க வேண்டும். அது கீழே பட்டு எதிரொளிக்கும். பின்னர் Photogrammetry மற்றும் Magnetic Gradiometry ஆகிய தொழிநுட்பங்களை பயன்டுத்தி தரைக்கு கீழே என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த சில காலங்களாக இந்த இடத்தில் ஏதும் இல்லை என்றும் மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு நிதி ஒதுக்க முடியாது என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது LIDAR தொழில்நுட்பம் மூலமாக அந்த இடத்தை அகழாய்வு செய்வதற்கு முன்னமே என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அகழாய்வு துறையில் இந்த தொழில்நுட்பம் மிகப் பெரிய உதவி புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் இத்தொழில்நுட்பத்ததை பயன்படுத்தி மண்ணுக்கடியில் கட்டிங்களோ சிலைகளோ இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

Exit mobile version