கேன்சரை வரும் முன்னரே கண்டுபிடிக்கும் புதிய இரத்த பரிசோதனை!!!

கடந்த வாரம்  வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஐந்து வகையான புற்றுநோய்களை வழக்கமான நோயறிதல் முறைகளைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே  கண்டறிய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சீன- அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சோதனையில் 91சதவிகித மக்களுக்கு இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டபோது எந்த அறிகுறிகளையும் காட்டாத புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களுக்கு  ஒன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வயிறு, உணவுக்குழாய், பெருங்குடல், நுரையீரல் அல்லது கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 உடனடி கவனம் என்பது குடும்ப வரலாறு, வயது அல்லது பிற அறியப்பட்ட ஆபத்து காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மிக முக்கியமானது, ஏனெனில் நோய்க்கு அதன் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சையளிக்கும்போது உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு கணிசமான அளவில் மேம்படுகிறது மற்றும்  எளிதாக அறுவைசிகிச்சை, மருந்துகள் அல்லது கதிர்வீச்சுடன் கட்டிகளை அகற்ற முடியும்.

 இருப்பினும், இன்றுவரை இது தவிர இன்னும்  சில பயனுள்ள ஆரம்ப நிலை சோதனைகள் மருத்துவத் துறையில் உள்ளன. D.N.A Methylation எனப்படும் இந்த  பகுப்பாய்வு  செயல்முறை அடிப்படையில் அறிகுறியற்ற நோயைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வெவ்வேறு புற்றுநோய்களுக்கு குறிப்பிட்ட டி.என்.ஏ அடையாளங்களை வைத்து புற்று நோய்க்கான வாய்ப்பை கணிக்கும். 

 புற்றுநோயானது உலகளவில் அதிக மரணங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும், இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1கோடி இறப்புகளுக்கு காரணமாகிறது. எனவே இது போன்ற ஆரம்பகால புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைத் திறனை உறுதிப்படுத்த அதிக அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம்

Exit mobile version