குறைந்த விலையில் குடிநீரை சுத்திகரிக்கும் கருவி கண்டுபிடிப்பு.

நாம் வாழும் இவ்வுலகத்தில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சுமார் 748 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரமற்ற சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடித்து நோய் வாய்ப்படுகின்றனர். இது வளரும் நாடுகள் மட்டும் அன்றி வளர்ந்த பல நாடுகளிலும் பிரச்சனையாக இருக்கிறது.

தண்ணீரை குளோரின் போன்ற வேதியியல் பொருட்களைக் கொண்டு சுத்திகரித்தாலும் அவற்றால் பல வகையான சிக்கல்கள் இருக்கின்றன. எனவே தண்ணீரை சுத்திகரிக்க வடிகட்டுதல் தான் சிறப்பான வழி என கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அனால் வடிகட்டுதல் எனும் செயல்பாடு மிகவும் விலையுயர்ந்ததாகவே உள்ளது. அதற்கான காரணம் நோய்களை உண்டாக்கும் வைரஸ் போன்ற நுண் கிருமிகள் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் அதனை தடுக்கும் அளவுக்கும் மிகவும் நுண்ணிய வடிகட்டிகளை உருவாக்குவது என்பது மிகவும் செலவு பிடிக்கும் செயலாகவே உள்ளது.

ஆனால் தற்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சுவீடன் நாட்டின் UPPSALA பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நேனோ தொழில்நுட்ப த் துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் செல்லுலோஸ் நானோ பைபர் எனப்படும் மிக நுண்ணிய இழை நார்களை பல அடுக்குகலாய் இணைத்து MILLE FEUILLE எனும் வடிகட்டியினை கண்டுபிடித்துள்ளனர். இவை முற்றிலும் இயற்கையாய் கிடைப்பதுமட்டுமல்லாமல் அவற்றை தயாரிப்பது மிகவும் எளிதாகவும் இருப்பதால் அனைத்து மக்களுக்கும் இவை கிடைக்கும் என நம்பு கின்றனர் இந்த ஆராய்ச்சி குழுவினர்.

இந்த வகையான வடிகட்டிகள் FLU காய்ச்சலை உண்டாக்கக்கூடிய influensa வைரஸ் போன்ற கொடிய கிருமிகளை கூட தடுக்கக்கூடிய அளவில் இருக்கிறது. இவற்றை சிறப்பாகவும், உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய வகையிலும், தரமானதாகவும் கட்டுபடியாகும் விலையில் கொண்டு சேர்ப்பதையே தங்கள் லட்சியம் என்கின்றனர் இக்குழுவினர்.

Exit mobile version