சாட்டிலைட்கள் எப்படி செயல்படுகின்றன : பாகம் 1

செயற்கைக்கோள்களை விண்னில் செலுத்துவதில் முதன்மையில் இருக்கும் நாடுகள் America , Russia, மற்றும் ஐரோப்பிய நாடுகள்  இணைந்து நடத்தும் ஐரோப்பியவிண்வெளிக்கழகம். அதற்கு அடுத்த நிலையில் India, china, Japan போன்ற நாடுகள் உள்ளன. தற்போது இந்தியா, மற்ற நாடுகளுக்கு சவால்விடும் அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை புரிந்து வரும் நிலையில் குறைந்த செலவில் வானுக்கு செயற்கை கோள்களை அனுப்புவதில் இந்தியா முன்னனியில் இருக்கிறது.


பூமிக்கு மேல் சுமார் 15கி.மீ வரை சென்றால் அழுத்தமும் வெப்பமும் குறைந்து கானப்படும். இது troposphere எனப்படுகிறது. அதற்கு மேல் இருக்கும் படலம் ஓசோன் வாயு இருக்கும் stratosphere. இங்கு வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதற்கு மேல் Mesosphere படலம் இருக்கிறது. இங்கு வெப்பநிலை மீண்டும் குறைய ஆரம்பிக்கும். அதன்மேல் இருக்கும் தெர்மோஸ்பியர் எனும் கடைசி படலத்தில் தான் செயற்கைகோள்கள் பறக்கின்றன. இங்கு ஈர்ப்புவிசை மிகவும் குறைந்து காணப்படுவதால் எடையற்ற தன்மை ஏற்படுகிறது. அதனால் அங்கு செயற்கைகோள்களினால் மிதக்க முடிகிறது.

விண்வெளிக்கு செயற்கைகோள்களை எடுத்துச்சென்று அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த உதவுவது ராக்கெட்கள். Robert D Goddard என்பவரால் உலகின் முதல் திரவ எரிபொருள் ராக்கெட் பறக்கவிடப்பட்டது. நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் ராக்கெட்கள் இயங்குகின்றன. திட மற்றும் திரவ எரிபொருட்களின் உதவியால் ராக்கெட்டுகள் இயங்கும். திட எரிபொருள் ராக்கெட்டுகள் மிகவும் எளிமையானதாகவும், செலவு குறைவானதாகவும் இருக்கும். அதே சமயம் திரவ எரிபொருள் ராக்கெட்டுகள் அதிகம் செலவாவதுடன் ராக்கெட் கிளம்பும் கடைசி நேரத்தில் தான் எரிபொருளை நிரப்பமுடியும். இவ்வகையான ராக்கெட்களை ஒரிடத்தில் நிறுத்தி மீண்டும் உடனடியாக இயக்க வைக்க முடியும்.

இது போன்ற மேலும் செயற்கைகோள்கள் பற்றிய தகவல்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Exit mobile version