மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் சோதனை ஆர்டெமிஸ் ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ நாசா திட்டம்

மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பவுள்ளது. இது 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க விட நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த 29ம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணியை தொடங்க நாசா திட்டமிட்டது.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. எதிர்பாராத சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 40வது நிமிடத்தில் கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்டெமிஸ் -1 ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குநருடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர். இந்த நிலையில், மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

Exit mobile version