3D பிரிண்டிங்கில் நவீன தொழில்நுட்பம்

தற்கால நவீன தொழல்நுட்பங்களில் ஒன்று 3D பிரிண்டிங். நோயாளிகளுக்கு அதிகம் நீடித்து செயல்படக்கூடிய செயற்கை உடல் பாகங்கள், மருத்துவ சாதனங்கள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது . மேலும் விமானங்கள் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான வலுவான பாகங்கள் ஆகிய கட்டுமான பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது  UMass Lowell பல்கலைகழகத்தைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.  இது 3D பிரிண்டிங்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.


 3-டி அச்சுப்பொறிகளில் பிளாஸ்டிக், உலோகம் மற்றும் மெழுகு போன்ற மூலப் பொருட்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டுப்  பொருட்களில் இருந்து குட்டி விமானம் வரை அனைத்தும் 3D யில் தயாராக ஆரம்பத்தித்துவிட்டன. உலக சந்தையில் 3D பொருட்களின் சந்தை மதிப்பு  400கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் தொழில் போட்டி மற்றும் சவால் காரணமாக அத்துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

 தற்போது Umass lowell பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள் Injection moulding தொழில்நுட்பத்தை 3டி பிரிண்டிங் உடன் பயன்படுத்தி புதிய உத்தியை கையாண்டுள்ளனர். அச்சுக்குழிகளில் மூலப் பொருட்களை நிரப்புவது Injection Moulding ஆகும். இந்த முறையை 3D யுடன் பயன்படுத்தும் போது 3 மடங்கு வேகமாகவும் அதிக பலத்துடன் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்பு உற்பத்தி செய்யப்பட்ட பகுதிகளின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. மேலும் அவை குறைந்த அளவிலான  விரிசல்கள்களையே கொண்டுள்ளன. எனவே அவை மிகவும் வலிமையானவையாக இருக்கின்றன. இதை உருவாக்க சுமார் 18 மாதங்கள் ஆனது. இதற்கு எனது பெயரில் காப்புரிமையும் பெற்றுள்ளேன் என்கிறார் இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாரான Austin Colon.

Exit mobile version