இன்றைய விஞ்ஞானி : டிமிட்ரி மெண்டலீவ்

டிமிட்ரி மெண்டலீவ் சைபீரியாவின் tobolsk நகரில்1834ம் ஆண்டு பிப்ரவரி8 ம் தேதி Ivan Pavlovich மற்றும் Maria தம்பதிக்கு பிறந்தார். குடும்பம் வறுமையில் துன்பப்பட்டபோது St.Petersberg நகருக்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம்.1850ல் அங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.1859 முதல் 1861 வரை இடைப்பட்ட காலத்தில் நீரின்ஈர்ப்பாற்றல் பற்றியும் ஒலியின் நிறமாலை(spectroscope) பற்றியும் அவர் செய்த ஆய்வுக்காக Petersberg Academy of Science சார்பில் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

 பின்னர் Organic Chemistry எனப்படும் கரிம வேதியியல் பற்றிய விரிவான புத்தகமும் வெளியிட்டார். 1864ல் St.Petersberg பல்கலையில் பேராசிரியராக இணைந்த Mendeleev அங்கு வேதியியல் துறையில் சிறந்து விளங்கினார். இவரது அயறாத முயற்சியின் காரணமாகவே பிற்காலத்தில் அப் பல்கலைகழகம் வேதியியல் துறைக்கான உலகின் சிறந்த இடமாக மாறியது. பெட்ரோலியம் பொருட்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மெண்டலீவ் ஒரு முறை அதனால் ஏற்பட்ட தீ விபத்தை காண நேரிட்டபோது பெட்ரோலை ஒரு எரிபொருளாக பயன்படுத்தலாம் எனக்  கூறினார். வாகனம் முதல் சமையலறை வரையில் அவற்றை பயன்படுத்தலாம் எனக் கூறிய முதல் மனிதரும் இவரே. இவரது ஆய்வுகளின் காரணமாகவே ரஷ்யாவின் முதல் பெட்ரோலிய ஆய்வு மையமும், சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டது.

1868ல் அதுவரை 56 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.ஆண்டுக்கு 1 அல்லது 2 எனும் விகிதத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது மெண்டலீவ், John NewLand, Lothar Meyer போன்றோர் Periodic Table என இன்று நாம் அழைக்கும் அட்டவணையின் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்கல் காரணமாக அவை நிராகரிக்கப்பட்டன. பின்னர் 1867ல் தன் மாணவர்களுக்காக Principles Of Chemistry எனும் புத்தகத்தை தானே தயாரித்தார். அப்போது தான் அவருக்கு தனிம அட்டவனை குறித்த சரியான யோசனை தோன்றியது. தனிமங்களின் வேதியியல் தன்மைகளை அடிப்படையாகக்கொண்டு இவர் உருவாக்கிய இவ்வட்டவனை சிறப்பாக அமைந்தது. பின்னர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தனிமங்களையும் ஒன்றிணைத்து, அவற்றின் அணுவின் நிறை மற்றும் எடையைக் கொண்டு அந்த அட்டவணையை உருவாக்கினார். 

அதுவரை கண்டுபிடிக்கப்படாத தனிமங்களுக்கு சமஸ்கிருத்தில் தனக்கிருந்த  ஈடுபாட்டின் காரணமாக eka-silicon, eka-aluminium என 8தனிமங்களுக்கு சமஸ்கிருத்திலேயே பெயரை வைத்தார். பின்னர் அவை உறுதிசெய்யப்பட்டு Germanium, Gallium, Scandium என பெயர் வைக்கப்பட்டன. 1905ல் இவரது கண்டுபிடிப்பிற்காக Royal Swedish Academyசார்பில் நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டது. பலர் இப்பரிசுக்காக இவரை முன்மொழிந்தாலும் Peter Klason எனும் உயரதிகாரி  அதற்கு உடன்படவில்லை. HenriMoissan என்பவருக்கு நோபல் பரிசை பரிந்துரைத்த அவர் 1867ல் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பிற்கு தற்போது பரிசு வழங்குவது இயலாது என்றும் அது மிகவும் பழமையான கண்டுபிடிப்பு எனக் கூறினார்.

 உலகம் முழுவதும் இருந்த அறிவியல் குழுக்கள் இவரை அங்கீகரித்தன. Royal Society Of London சார்பாக Copley medalஉம் வெளிநாட்டு உறுப்பினர் பதவியும் கிடைத்தது.1893ல் Bereau of Weights and Measurementன் தலைவராக இறுதிக்காலம் வரை பணிபுரிந்தார். Russian Chemical Society உருவாக முக்கியக் காரணமாக இருந்தார். பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள National Meteorological Instituteக்கு இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது பெயரே அங்குள்ள அருங்காட்சியகத்துக்கும் சூட்டப்பட்டது. பின்னர் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமத்திற்கும் Mendelevium என இவரது பெயர்வைக்கப்பட்டடதுடன் 1991 முதல் Mendeleev Golden Medal எனும் விருது இவரது பெயரில் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. நிலவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.1907ல் தன் 72 வயதில் Influenza virus காய்ச்சலால் St.Petersberg நகரில் காலமானார் மெண்டலீவ்.

Exit mobile version